Type Here to Get Search Results !

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க கண்டன ஆர்ப்பாட்டம்.


தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி மற்றும் 3 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பொய் வழக்கு பதிவு செய்ததை கண்டித்து, தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பழனியப்பன், மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளர் யோகானந்தன் என்கிற பாலவாடி மணி ஆகியோர் தலைமை தாங்கினர்.



திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் அணுப்பட்டி ஊராட்சி மன்றத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வரும் கிஸ்கால் என்ற பழைய இரும்பு உருக்கு ஆலையின் உரிமத்தை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி மற்றும் 3 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவு செய்த பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.


இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொருளாளர் சக்திவேல், மேற்கு மாவட்ட செயலாளர் முருகன், மேற்கு மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் பேபி உட்பட சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies