Type Here to Get Search Results !

பெரியபூலாப்பட்டி கிராமத்தில் அருள்மிகு பூமி-நிலா சமேத பெருமாள் திம்மராய சுவாமி திருக்கல்யாண 2ம் ஆண்டு திருவிழா நடைப்பெற்றது.


தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் அடுத்துள்ள  பெரியபூலாப்பட்டி எழுந்தருளியுள்ள அருள்மிகு பூமி-நிலா சமேத பெருமாள் திம்மராய சுவாமி திருக்கல்யாண 2ம் ஆண்டு திருவிழா இன்று நடைப்பெற்றது.

இதையடுத்து மங்கள இசை கணபதி பூஜையுடன் தொடங்கிய விழாவானது, புண்யாகவாசனம், மகாசங்கல்பம், கணபதி ஹோமம், தன்வந்திரிஹோமம், சுதர்சன ஹோமம், வேதபாராயணம், தூப தீப நெய்வேதியம், செய்து திருக்கல்யாணம் நடந்தேறியது.

இதனையடுத்து  விக்கிரகத்திற்க்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மகா தீபாரதனை காட்டப்பட்டது, சிறப்பு அலங்காரத்தில் பூமி - நிலா சமேத பெருமாள் திம்மராய சுவாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்த விழாவையொட்டி  சுற்று வட்டார பகுதிகளிலிருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

 

பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாட்டை ஊர்கவுண்டர், மந்திரி கவுண்டர்   மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies