அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகப் பொதுச் செயலாளர் மற்றும் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமியின் 69-வது பிறந்தநாளையொட்டி தருமபுரி மாவட்டம் பாடி கிராமத்தில் அதிமுக தகவல் தொழில் நுட்பப் பிரிவு மாவட்ட செயலாளர் ம.கோவிந்தசாமி தலைமையில் பத்து கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் அதிமுக கிளை செயலாளர்கள் கோவிந்தன், கோபி, அசோகன், தகவல் தொழில் நுட்பப் பிரிவு ஒன்றிய இணை செயலாளர் சேட்டு, அதிமுக செயல்வீரர்கள் இராமகவுண்டர், பச்சியப்பன், குட்டிமணி சக்கரவர்த்தி, முனிராஜ், குமரேசன், ஸ்ரீராமன் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

.gif)

