தருமபுரியில் ஒருங்கிணைந்த விவசாயிகள் நல சங்கம் சார்பில் விவசாய கண்காட்சி துவங்கியது, தருமபுரி மதுராபாய் திருமண மண்டபத்தில் இக்கண்காட்சி நடந்து வருகிறது. இக்கண்காட்சியை தமிழக விவசாயிகள் சங்க தலைவர் எஸ். ஏ. சின்னசாமி குத்துவிளக்கு ஏற்றியும் ரிப்பன் வெட்டியும் துவங்கி வைத்தார்.
கண்காட்சியில், விவசாயம் சார்ந்த பண்ணை கருவிகள், அறுவடை இயந்திரங்கள், உழவு எந்திரங்கள், விதைகள், பூச்சி மருந்துகள், இயற்கை உரங்கள், ஆர்கானிக் உணவுகள், செடி வகைகள் சார்ந்த அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த விவசாயிகள் நல சங்க தலைவர் நல்லியப்பன் தலைமையிலான குழுவினர் செய்துள்ளனர். இக்கண்காட்சி நாளையுடன் நிறைவடைகிறது.
.gif)

