Type Here to Get Search Results !

ஒகேனக்கல்லில் சுற்றுலாப் பயணிகளை தாக்கிய பரிசல் ஓட்டிகள் 4 பேர் மீது காவல் துறை வழக்கு பதிவு-பரிசல்களை பறிமுதல் செய்து, உரிமத்தினை தற்காலிகமாக ரத்து.


தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்திற்கு வந்த சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதற்காக, ராமர் என்ற பரிசலோட்டியுடன் சென்றுள்ளனர்.  இந்நிலையில் பரிசல் ஒட்டி ராமர் சுற்றுலா பயணிகளை பரிசல் துறையில் இருந்து மாமரத்துக்கடவு வரை அழைத்துச் சென்று திரும்பி உள்ளார். அப்பொழுது ஒரு மணி நேரத்திற்கு 750 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 15 நிமிடத்திலேயே பயணத்தை முடித்து விட்டீர்கள் என்று சுற்றுலா பயணிகள் கேட்டுள்ளனர். அப்பொழுது சுற்றுலா பயணிகளுக்கும் பரிசல் ஒட்டி ராமருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.  இதனை அறிந்த  பரிசல் ஒட்டிகள், சுற்றுலாப் பயணிகளை கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 


சுற்றுலா பயணிகளிடம் அத்துமீறி வாக்குவாதத்தில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டவர்கள் நடவடிக்கை எடுக்க  பென்னாகரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பாலாஜி, ஒகேனக்கல் காவல் நிலையத்தில் பரிசல் ஓட்டிகள் மீது புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில், காவல் துறையினர் பரிசல் ஓட்டிகள் ராமர், கண்ணையன், இராமசந்திரன், பெருமாள் ஆகிய நான்கு பேர்  மீது வழக்குபதிவு செய்து,  படகுகளை பறிமுதல் செய்தனர். மேலும்  பேரின் பரிசல் ஓட்டும் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்தும், இவர்கள் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies