Type Here to Get Search Results !

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில செயற்குழு கூட்டம்.


தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம், தர்மபுரி நகரில் ரோட்டரி கூட்ட அரங்கத்தில் சங்கத்தின் மாநில தலைவர் தமிழ்ச்செல்வி தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் தர்மபுரி மாவட்ட தலைவர் மாது வரவேற்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில தலைவரும், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க மாநில தலைவருமான கங்காதரன் வாழ்த்தி பேசினார். முன்னாள் பொதுச் செயலாளர் இரா.பாலசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். 

பின்னர் பொதுச் செயலாளர் லட்சுமி நாராயணன் வேலை அறிக்கையினையும், மாநில பொருளாளர் வெங்கடேசன் வரவு செலவு அறிக்கையினையும் தாக்கல் செய்து பேசினர். மாநில துணைத்தலைவர் மோகன மூர்த்தி நன்றி உரையாற்றினார்.


இச்செயற்குழு கூட்டத்தில்,  மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி அறிவிக்கப்படும் அதே நாளில் அதே விகிதத்தில் தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும் என வெளியிட்ட அரசின் அரசாணையில் தெரிவிக்கப்பட்ட உத்தரவாதத்திற்கு மாறாக மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு உயர்த்தி வழங்கியுள்ள 4 சதவீத அகவிலைப்படி உயர்வினை இதுவரை அறிவிக்காததற்கு கண்டனம் தெரிவித்தும், உடனடியாக அகவிலைப்படி உயர்வை அறிவிக்குமாறு கோரியும், நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வலியுறுத்தியும் தொடர் போராட்டங்களில் ஈடுபடுவது என்றும், முதல் கட்டமாக 26.5.23 அன்று மண்டல அளவில் உண்ணாவிரத போராட்டங்களை நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் பொறுப்பினை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும் எனவும், இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் நடத்தும் போராட்டத்திற்கு முழுமையாக ஆதரவளிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. தமிழக அரசு கடந்த காலங்களில் வழங்கிய உத்திரவாதத்தின் அடிப்படையில் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி தொடர்ச்சியாக போராடிவரும் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களின் கோரிக்கையினை, அச்சங்க நிர்வாகிகளை அழைத்து பேசி நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies