Type Here to Get Search Results !

பாலக்கோடு அருகே பாட்டியின் அரவணைப்பில் இருந்த 2 வயது குழந்தை விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழப்பு- போலீசார் விசாரணை.



தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே காட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த கட்டிட கூலி தொழிலாளி ராஜசேகர் இவரது மனைவி சாலா  இவர்களுக்கு திருமணமாகி 10 வருடம் ஆகிறது, இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தையும்  2வயதில் ரஞ்சித் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.


குழந்தைகளை  பாட்டியிடம் விட்டுவிட்டு தாய் தந்தை இருவரும் கட்டிட வேலைக்காக பெங்களூருக்கு சென்று இருந்த நிலையில் இன்று மாலை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 2 வயது ஆண் குழந்தை ரஞ்சித்  வீட்டின் அருகே இருந்த விவசாய கிணற்றில் எதிர்பாராத விதமாக தவறி விழுந்து உயிரிழந்தது.


தகவலறிந்த பாலக்கோடு போலீசார் குழந்தையின்  உடலை  மீட்டு  உடற்கூறு ஆய்விற்க்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும் இது  குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies