Type Here to Get Search Results !

தொடர்கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையன் கைது; 37 சவரன் நகை பறிமுதல்.


தருமபுரி மாவட்டம் கோவிந்தசாமி தெருவை சேர்ந்தவர் பெருமாள் மகள் செல்வி (39) இவர் தருமபுரி அருகே ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார். தனது தாயார் கமலாவுடன் வாடகை வீட்டில் வசித்து வருகிறார் கடந்த 2-ம் தேதி வழக்கம் போல் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றார். இதையடுத்து தாயார் கமலா வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். சில மணி நேரம் கழித்து, திரும்பிய போது பூட்டு உடைக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பொருட்கள் சிதறி கிடந்தன இதுகுறித்து கமலா, செல்விக்கு தகவல் தெரிவித்துள்ளார். செல்வி சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த சுமார் 17.25 பவுன் நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது இது குறித்து தருமபுரி நகர காவல் நிலையத்தில் செல்வி புகார் அளித்தார் இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர்.


இதே போல் தருமபுரி ஏ.கொல்ல அள்ளி மேல்கொட்டாய்மேடு பகுதியைச் சேர்ந்த ரங்கநாதன்-சுகந்தி வீட்டில் 4 பவுன் தங்க நகையும் தருமபுரி குள்ளனூர் பகுதியை சேர்ந்த சந்திரன் (42) என்பவர் வீட்டில் 5 பவுன் நகையும் திருட்டு போனது இவ்வாறு அடுத்தடுத்து நான்கு வீடுகளில் தொடர்ந்து திருட்டு சம்பவம் நடந்தது இதையடுத்து கொள்ளையனை பிடிக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் உத்தரவின் பேரில் நான்கு தனிப்படைகள் அமைத்து குற்றவாளியை தேடும் பணி மேற்கொள்ளப்பட்டது. மேற்படி வழக்குகளில் பதிவான சம்பவ இடங்களில் கண்ட கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் செல்பேசி தகவல்களை சேகரித்து, தேடிவந்த நிலையில் மேற்சொன்ன நான்கு வழக்குகளிலும் ஒரே மாதிரியான குற்ற செய்கை ஒத்துப்போவது அறிந்து அதன்படி தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.


இந்நிலையில் கொள்ளையனின் செல்போன் சிக்னலை தொடர்ந்து சென்னை, கோயம்புத்தூர், வேலூர், கரூர், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம் மற்றும் தருமபுரி ஆகிய இடங்களில் பின் தொடர்ந்து தேடி வந்த நேரத்தில் 8/5/2023 அன்று மாலை காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் தருமபுரி நகர பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள மதுபான கடைக்கு அருகில் நின்றிருந்தவரை சுற்றி வளைத்து கைது செய்யப்பட்டது. விசாரணையில் தான் சென்னை பூவிருந்தவல்லி காவல் நிலைய குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருந்து கடந்த 03/01/2023 அன்று பிணையில் வெளியே வந்ததாகவும், அவர் மீது சென்னை பெருநகர காவல் துறையில் 35-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதற்காகவும் தான் இதற்கு முன்பு கரூர், பொள்ளாச்சி, ஈரோடு, சேலம் மற்றும் தருமபுரியில் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக அவர் ஒப்புக்கொண்டார்.


இதை தொடர்ந்து கைது செய்து அவர் வைத்திருந்த பஜாஜ் பல்சர் 220 TN 38 DE 1003 என்ற வாகனத்தையும் கைப்பற்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையின் போது மேற்படி நபர் கார்த்திக்(29) என்கிற மாரியப்பன் த/பெ தேவதாஸ், எண் 7, சித்தி விநாயகர் கோயில் தெரு, கண்ணம்மாள் பேட்டை, தியாகராய நகர், சென்னை. என்ற நிரந்தர முகவரியில் தங்கி இருந்து தற்போது அன்னை நகர், கவுண்டம்பாளையம், கோயம்புத்தூர். என்கின்ற பகுதியில் தற்காலிகமாக தங்கி இருந்து குற்ற செயல்களில் ஈடுபட்டதாக ஒப்புக் கொண்டுள்ளார். ஒப்புதல் கொடுத்த உடனே தனிப்படை கோயமுத்தூர் விரைந்து அவரிடம் இருந்து சுமார் 37 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டது.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies