இக்கூட்டத்திற்க்கு மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, மாவட்ட துணைசெயலாளர் ராஜகுமாரி, முன்னாள் எம்.எல்ஏ. வெங்கடாசலம், முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் பி.கே.முருகன், வி.எம் நாகராசன், மாரண்ட பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், பொதுக்குழு உறுப்பினர் முர்த்துஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தலைமை கழக பேச்சாளர் தமிழரசன் கலந்து கொண்டு பேசியதாவது தமிழக அரசு கடந்த 2 ஆண்டுகளில் பெண்களுக்காக இலவச பேருந்து, கல்லூரி மாணவிகளுக்கு புதுமை பெண் திட்டம் மூலம் மாதம் ஆயிரம் ரூபாய், ஒன்றரை இலட்சம் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், ஓகேனக்கல் கூட்டு குடிநீர் 2 ம் கட்ட திட்டம் 4 ஆயிரத்து 600 கோடி ரூபாயில் துவக்கப்பட்டுள்ளது.
தர்மபுரியில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டு விழா உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை இரண்டே ஆண்டுகளில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சாதித்து காட்டியுள்ளார் என பேசினார். இக்கூட்டத்திற்க்கு முன்னாள் மாவட்ட பிரதிநிதி கோவிந்தசாமி வரவேற்புரை ஆற்றினார்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் ரவி, ஒன்றிய நிர்வாகிகள் ராஜாமணி,அற்புதம்செந்தில், குமார், முத்துசாமி, அழகு சிங்கம், முனிரத்தினம், மணி, ஆனந்தன், செழியன், ராஜேஸ்வரி, தர்மன், முருகன், மற்றும் கட்சி தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் கிளை செயலாளர் வெங்கடேசன் நன்றி தெரிவித்தார்.
.gif)

