Type Here to Get Search Results !

தர்மபுரி-கிருஷ்ணகிரி ஸ்ரீ விஜய் வித்யாலயா பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சாதனை மாநில அளவில் சிறப்பிடம் பெற்றனர்


தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் மாநில அளவில் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரியில் உள்ள ஸ்ரீ விஜய் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் பிளஸ்-2 பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கிருஷ்ணகிரி பள்ளியைச் சேர்ந்த மாணவி லீலா ஸ்ரீ 598 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் சிறப்பிடம் பெற்று சாதனை படைத்துள்ளார். 


இதேபோன்று இந்த பள்ளியைச் சேர்ந்த மாணவி மோனிஷா 593 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் 2-ம் இடமும், மாணவி தமிழ்வாணி 592 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


இதேபோன்று தர்மபுரி பள்ளியைச் சேர்ந்த மாணவி புவனேஸ்வரி 591 மதிப்பெண்கள் பெற்று பள்ளி அளவில் முதல் இடமும், மாணவி நித்யதர்ஷினி 587 மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவர் நரேன்  584 மதிப்பெண்கள் பெற்று 3-ம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். இந்தப் பள்ளிகளில் முக்கிய பாடங்களில் 23 பேர் 100-க்கு 100 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளனர்.


இந்தப் பள்ளிகளில் 580 மதிப்பெண்களுக்கு மேல் 8 பேரும், 550 மதிப்பெண்களுக்கு மேல் 42 பேரும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 127 பேரும், 450 மதிப்பெண்களுக்கு மேல் 175 பேரும், 400 மதிப்பெண்களுக்கு மேல் 138 பேரும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.


இந்த சாதனை படைத்த மாணவ, மாணவிகளை ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.என்.சி. இளங்கோவன், தாளாளர் மீனா இளங்கோவன், இயக்குனர்கள் பிரேம் இளங்கோவன், சினேகா பிரவின், பள்ளி முதன்மை நிர்வாக அலுவலர் சந்திர பானு, பள்ளி முதன்மை முதல்வர் நாராயணமூர்த்தி, முதல்வர்கள் பத்மா, நவிதாசங்கர் மற்றும் ஆசிரியர்கள் பொறுப்பாசிரியர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies