தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சையத்பீர் தெருவிலுள்ள அஸ்ரவ்பியா மஸ்ஜித்தில் ரம்ஜான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அமமுக மாவட்ட செயலாளர் D. K.ராஜேந்திரன் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறந்து வைத்து நோன்பு கஞ்சி அருந்தினார்.

அது சமயம் இஸ்லாமிய தோழர்கள் உலக அமைதிக்காவும், அனைவரும் அனைத்து நலமும் பெற வேண்டி சிறப்பு துவா நடத்தினர். இந்த இப்தார் நிகழ்ச்சியில் பாலக்கோடு நகர செயலாளர் ஞானம், சிறுபான்மை மாவட்ட செயலாளர் மசியுல்லா, மாநில பொறுப்பாளர் பாலு, மாவட்ட துணை செயலாளர் ஏகநாதன், மாவட்ட அவைத் தலைவர் முத்துசாமி, ஒன்றிய செயலாளர் கருணாகரன் , மேற்கு ஒன்றிய செயலாளர் கணேசன், சுபான் உள்ளிட்ட கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.