கொரோனா ஊரடங்கில் பல குடும்பங்களுக்கு மளிகை பொருட்கள் பலரின் உதவியால் சேவை செய்துவந்தனர், ஏப்ரல் 2021 தமிழ் புத்தாண்டு அன்று முதல் தினந்தோறும் ஏழை மக்களுக்கு ஒரு வேளை உணவு வழங்கும் பணியை தொடங்கினர், இந்த சேவை இரண்டு ஆண்டுகளை கடந்து மூன்றாம் ஆண்டு துவக்க விழாவையொட்டி தருமபுரி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள நோயாளிகளின் பார்வையாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

உணவு வழங்க சிறப்பு விருந்தினராக தருமபுரி மாவட்ட சுதந்திர போராட்ட தியாகி சிவகாமி அம்மாள் அவர்கள் கலந்து கொண்டு ஏழை மக்களுக்கு உணவு வழங்கினார். அப்போது பொது மக்கள் பலரும் அவரிடம் ஆசிர்வாதம் பெற்று சென்றனர். மை தருமபுரி அமைப்பின் அனைத்து செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக இருந்து வரும் CKM நிறுவனத்தின் CEO மாதேஷ், பத்திர எழுத்தாளர் கணேசன், PSB டிபார்ட்மெண்ட் நிறுவன உரிமையாளர் சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கினர். உணவு வழங்கும் நிகழ்ச்சியை மை தருமபுரி அமைப்பின் தன்னார்வலர்கள் ஒருங்கிணைத்தனர்.