தருமபுரி மாவட்டம், ஆர்.கோபிநாதம்பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. நிகழ்விற்கு கல்லூரியின் தாளாளர் ராமலிங்கம் தலைமை தாங்கினார், கல்லூரியின் முதல்வர் ரா.கணேஷ் வரவேற்று பேசினார்.
கல்லூரி தலைவர் கோபி முன்னிலை வகித்தார். தருமபுரி கிருஷ்ணா ஹீரோ சங்கரநாராயணன் வாழ்த்துரை வழங்கினார். நிகழ்விற்கு நரசுஸ் சாரதி பொறியியல் கல்லூரி முதல்வர் முனுசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடம் உரையாற்றினார். நிறைவாக இயந்திரவியல் துறைத்தலைவர் அருண்பிரசாத் நன்றியுரை வழங்கினார். இதில் முன்னாள் மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.