தருமபுரி கிழக்கு மாவட்ட சார்பில் திருச்சியில் நடைபெறும் மாநாடு குறித்து அவைத் தலைவர் முரளி, தலைமையில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. டி. ஆர். சுரேஷ், மாநில துணை செயலாளர், காவேரி மாவட்ட மகளிர் அணி செயலாளர், பாஸ்கர், எம். ஜி.ஆர்.மன்ற மாவட்ட செயலாளர்,பொன் நேதாஜி மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர், இளையராஜா, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர், சதீஷ், மாவட்ட பாசறை செயலாளர் முன்னிலை வகித்தனர்.

இதில் கிழக்கு மாவட்ட செயலாளர் கே.எம்.குமார், மாநாட்டுக்கு கிழக்கு மாவட்டத்தில் 5000 தொண்டர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்று சிறப்புரை நிகழ்த்தினார். இதில் ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் லட்சுமணன், விஜயன், சபரி, சிவப்பிரகாசம், எழிலரசன், இளையராஜா, பன்னீர்செல்வம், சிவலிங்கம், வஜிஜ்ரம், வெங்கடேசன், உமாபதி, நாகராஜன், ராஜேஷ்குமார், முனியப்பன், பெரியசாமி, வெங்கடாசலம் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.