தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு சையத்பீர் தெருவிலுள்ள அஸ்ரவ்பியா மஸ்ஜித்தில் ரம்ஜான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி பொதுக்குழு உறுப்பினர் பாபு (எ) முர்த்துஜா தலைமையில் நடைப்பெற்றது. நிகழ்ச்சிக்கு பட்டுஅஜிசுல்லா, பத்தேகான் அமீர்ஜான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளர் முனைவர் பி.பழனியப்பன் கலந்து கொண்டு இப்தார் நோன்பு திறந்து வைத்து நோன்பு கஞ்சி அருந்தினார். இதில்உலக அமைதிக்காவும், அனைவரும் அனைத்து நலமும் பெற வேண்டி சிறப்பு துவா நடத்தினர்.
இந்த இப்தார் நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி, மாநில விவசாய அணி துணை செயலாளர் சூடப்பட்டி சுப்ரமணி, மாவட்ட துணை செயலாளர் வக்கீல்மணி, பொருளாளர் முருகன், ஒன்றிய செயலாளர்கள் முனியப்பன், வக்கில் கோபால், கிருஷ்ணன், அன்பழகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், உள்ளிட்ட கட்சி தொண்டர்களும், நிர்வாகிகளும் திரளாக கலந்து கொண்டனர்.