தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், அதியமான்கோட்டை ஊராட்சி அதிமுக சார்பில், அதியமான் கோட்டை பஸ் நிறுத்தம் அருகில் நீர், மோர் பந்தல் துவக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சரும் மாவட்ட செயலாளருமான கே.பி.அன்பழகன் தலைமை தாங்கினார்.
மேலும் நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ், கிளை செயலாளர்கள் பிரேம்குமார் ரிஷிகேசன் வேலு, தண்டபாணி ராமன், செந்தில், அன்பு அங்கப்பன் ஊராட்சி கழக செயலாளர் காளியப்பன் கூட்டுறவு சங்க தலைவர் அருவி, பால்வள தலைவர் குழந்தைசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு பொது மக்களுக்கு நீர், மோர், தர்பூசணி வழங்கினர்.
