தர்மபுரி எஸ்.பி அலுவலகம் அருகில் "காவலர் நல உணவகம்" செயல்பட்டு வருகிறது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்களும், காவல் அதிகாரிகளும் இந்த உணவகத்திற்கு வந்து உணவருந்தி விட்டு செல்வது வழக்கம். இந்த உணவகத்தில் இன்று காலை எழுதி வைத்திருந்த உணவுப் பொருட்களின் விலை பட்டியலை பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
பொங்கல் என்பதற்கு பதிலாக பொங்கள் எனவும், பிளைன் தோசை என்பதற்கு பதிலாக பிளைன் தொசை எனவும், மசால் தோசை என்பதற்கு பதிலாக மசாள் தொசை எனவும் மெதுவடை என்பதற்கு மேது வடை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக் கண்ட பொதுமக்கள் பலர் தமிழை இவ்வளவுதான் கொலை செய்ய முடியுமா என்று நக்கல் அடித்தவாறே சென்றனர்.
