தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து தளவாய்அள்ளி கிராமத்தில் இண்டூர் பாப்பாரப்பட்டி சாலையில் இருந்து தளவாய்அள்ளி வரை ரூபாய் 9.50 இலட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைத்தல் மற்றும் சிறுகளூர் கிராமத்தில் ரூபாய் 3.50 இலட்சம் மதிப்பீட்டில் 50000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்தல் ஆகிய இரண்டு பணிகளுக்கு தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் பூமிபூஜை செய்து, அடிக்கல் நாட்டி பணிகளை துவங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் நல்லம்பள்ளி ஒன்றிய குழு தலைவர் மகேஷ்வரி பெரியசாமி பாமக மாநில துணைத் தலைவர் பி.சாந்தமூர்த்தி மாநில அமைப்பு செயலாளர் ப.சண்முகம் மாநில இளைஞர் சங்க செயலாளர் எம்.முருகசாமி மாநில செயற்குழு உறுப்பினர் பெ.பெரியசாமி ஒன்றிய செயலாளர்கள் ப.பெ.சக்தி, கி.மணி, ஒன்றிய தலைவர் விஜி மற்றும் முக்கிய நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.