Type Here to Get Search Results !

தர்மபுரி மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்.


தர்மபுரியில் அம்பேத்கர் பிறந்த விழாவை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். சட்ட மேதை அம்பேத்கர் பிறந்தநாள் விழா தர்மபுரியில் சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவையொட்டி அவரது உருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் அவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதேபோல் மாவட்டம் முழுவதும் பல்வேறு கட்சியினர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தர்மபுரி கோல்டன் தெருவில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தி.மு.க. சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தடங்கம் சுப்பிரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர் நாட்டான் மாது, முன்னாள் நகர செயலாளர் அன்பழகன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட துணை செயலாளர் ரேணுகாதேவி, ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் நடராஜ், நகர அவை தலைவர் அழகுவேல், நகர துணை செயலாளர்கள் முல்லைவேந்தன், அன்பழகன், கோமளவள்ளி ரவி, நகர பொருளாளர் சம்மந்தம், மாவட்ட பிரதிநிதிகள் கனகராஜ், சுருளிராஜன், நகராட்சி கவுன்சிலர் புவனேஸ்வரன், மாவட்ட சார்பு அமைப்பு நிர்வாகிகள் வக்கீல் தாஸ், காசிநாதன்,  கவுதம், ரவி, ராஜா,  ரஹீம், சந்திரமோகன், குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


கடத்தூர்.

இதேபோன்று கடத்தூரில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான பி.பழனியப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவரது தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் சிவப்பிரகாசம், நெப்போலியன். சக்திவேல், மாது, முத்துக்குமார், பொதுக்குழு உறுப்பினர்கள் தேவேந்திரன், கிருஷ்ணகுமார், சென்னகிருஷ்ணன், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ராசுதமிழ்ச்செல்வன், ஜெகநாதன், முன்னாள் மாவட்ட துணை செயலாளர் முனிராஜ்,  கடத்தூர் பேரூராட்சித் தலைவர் கேஸ்மணி, அவைத் தலைவர் ராஜா, கவுன்சிலர்கள் சுரேஷ், தங்கராஜ், பிரகாஷ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி நந்தன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


அ.தி.மு.க.- அ.ம.மு.க. கட்சியினர்.

தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.பி. அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமையில் கட்சி நிர்வாகிகள் தர்மபுரியில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அரசு மருத்துவமனை அருகில் உள்ள அம்பேத்கர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், கோவிந்தசாமி எம்.எல்.ஏ., மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், நகர செயலாளர் பூக்கடை ரவி, கூட்டுறவு ஒன்றிய தலைவர் பொன்னுவேல், மாவட்ட சார்பு அணி செயலாளர்கள் தகடூர் விஜயன், பழனிசாமி, மோகன், கோவிந்தசாமி, அண்ணா பணியாளர்கள் சங்க மாநில செயலாளர் சின்அருள்சாமி, ஒன்றிய செயலாளர்கள் நீலாபுரம் செல்வம், சிவப்பிரகாசம், பழனி, கோபால், தனபால். நகர அவை தலைவர் அம்மா வடிவேல், நகர துணை செயலாளர்கள் அறிவாளி, சுரேஷ், நகர இணை செயலாளர் தனலட்சுமி சுரேஷ், நகர பொருளாளர் பார்த்திபன், மாவட்ட பிரதிகள் பலராமன், வேல்முருகன், நகராட்சி கவுன்சிலர்கள் தண்டபாணி, முன்னா, மாதையன், ராஜா, நாகராஜன், செந்தில்வேல், நாகேந்திரன், மாதேஷ், கூட்டுறவு சங்க தலைவர் அங்குராஜ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரவை மாநில துணைத்தலைவர் ஆர்.பாலு, மாவட்ட அமைத்தலைவர் முத்துசாமி, மாவட்ட பொருளாளர் மணிமேகலன், நகர செயலாளர் பார்த்திபன், ஒன்றிய செயலாளர்கள் கணேசன், பூங்காவனம், தங்கமணி, மாதேசன், சார்பு அணி மாவட்ட செயலாளர்கள் கோகுல்ராஜ், கிருஷ்ணன், சபியுல்லா, ராஜா, பொதுக்குழு உறுப்பினர் ரமேஷ் உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

காங்கிரஸ்- தே.மு.தி.க கட்சியினர்.

தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான தீர்த்தராமன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெய்சங்கர், சண்முகம், நகர தலைவர் வேடியப்பன், மாவட்ட பொருளாளர் வடிவேல், எஸ்.சி.- எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் சம்பத்குமார், இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் நவீன், ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகி தங்கவேல், மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவர் காளியம்மாள், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முபாரக், நிர்வாகிகள் தமிழ்வாணன், மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தர்மபுரி கிழக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாவட்ட செயலாளர் குமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து அம்பேத்கர்  சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில கேப்டன் மன்ற செயலாளர் புல்லட் மாரிமுத்து, மாவட்ட அவைத் தலைவர் தங்கவேல், மாவட்ட துணைச் செயலாளர் பொன்மொழி,, நகர செயலாளர் தேவதேவன், ஒன்றிய செயலாளர்கள் விக்னேஷ் குமார், சரவணன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செந்தாமரைக்கண்ணன், மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் பிரகாஷ், மாவட்ட தொண்டரணி செயலாளர் ராமன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரதி, ஒன்றிய துணைச் செயலாளர் துரை, நகரத் துணைச் செயலாளர் சுதா, மாவட்ட பிரதிநிதிகள் சங்கர், அன்பு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


இ.கம்யூனிஸ்டு கட்சி.

இதேபோன்று தரமபுரி மாவட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர்  கலைச்செல்வன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் மாநில நிர்வாக குழு உறுப்பினர் தேவராஜன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் மணி, வட்டார செயலாளர்கள் பிரசாத், மாது, மாவட்ட குழு உறுப்பினர் சிவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோன்று பல்வேறு அமைப்புகள் மற்றும் கட்சிகள் சார்பில் அம்பேத்கர்  சிலைக்கு மாலை அணிந்து மரியாதை செலுத்தப்பட்டது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

🌟 வேள்பாரி சர்வதேச விருதுகள் 2025 | இன்றே விண்ணப்பிக்கவும், கடைசி நாள் 15 ஆகஸ்ட் 2025 மேலும் விவரங்களுக்கு அழைக்கவும் : 9843 663 662 / 882 5531 884