தர்மபுரி மாவட்ட நர்சரி பிரைமரி மெட்ரிகுலேஷன் சிபிஎஸ்இ மாவட்ட தலைவர் முனிரத்தினம் வெளியிட்டுள்ள அறிக்கை, அதில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும், கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 25 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட உள்ளது.
பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் பிறப்புச் சான்றிதழ், ஆதார் நகல் உள்ளிட்டவைகளுடன் வரும் 20ம்தேதி முதல் இணையதளத்தில் பதிவிட்டு, இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர விண்ணப்பித்து பயன்பெறலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
