இந்திய அரசின் சட்டத்தினை உருவாக்கியவரும், சமூக நீதிக்காகவும், சட்ட உரிமைக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும் போராடியவருமான அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு, சிவாடி வழக்கறிஞர் சிவக்குமார் சார்பில், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், செல்வம், துரைசாமி, பழனி, காமராஜ், சிவன், முருகன், சங்கர், சுமதி ஆறுமுகம் உள்ளிட்ட ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
