தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தர்மபுரி மாவட்டக்குழு சார்பாக சத்துணவு ஊழியர்கள் வாழ்க்கையில் ஒளியேற்ற வலியுறுத்தி, ஒளி ஏற்றி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இக் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தினர் தங்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி திரளாக கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் காவேரி தலைமை வகித்தார். ராமன், அனுசுயா, வளர்மதி, மஞ்சுளா ஆகியோர் முன்னிலை வகிக்க, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதிய சங்க மாநில செயலாளர் கிருஷ்ணமூர்த்தி துவக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் தேவகி கோரிக்கை விளக்க உரையாற்ற, புகழேந்தி வாழ்த்துரை வழங்கினார். மாநில செயலாளர் மகேஸ்வரி நிறைவுறையாற்றினார். இறுதியில் மாவட்ட பொருளாளர் வளர்மதி நன்றி உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், ஓய்வூதியம் 9000 வழங்கிட வேண்டும், காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்கிட வேண்டும், ஆறு மாதமாக வழங்காமல் உள்ள மானிய தொகையை உடனே வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.