
இந்நிகழ்ச்சியில் தர்மபுரி திமுக மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் முனைவர்.பழனியப்பன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். இதில் பெண்கள் பிரிவில் சேலம் ஏ.என். மங்களம் அணி முதலிடத்தையும், ஓசூர் ஈகிள் அணி 2ம் இடத்தையும், நாகப்பட்டிணம் அணி 3ம் இடத்தையும், சேலம் சக்திகைலாஷ் அணியும், 4ம் இடத்தையும் ஈரோடு அணியும் 5ம் இடத்தையும் வென்றது, அதே போன்று ஆண்கள் பிரிவில் திருச்சி போலீஸ் அணி முதலிடத்தையும், கோவை அணி 2ம் இடத்தையும், சேலம் ஏ.வி.எஸ் அணி 3ம் இடத்தையும், ஓமலூர் அணி 4ம் இடத்தையும், தர்மபுரி டான்பாஸ்கோ அணி 5 இடத்தையும் வென்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு முதல் பரிசாக 20 ஆயிரம் ரூபாயும், 2ம் பரிசாக 15 ஆயிரம் ரூபாயும், 3ம் பரிசாக 12 ஆயிரம் ரூபாயும், 4ம் பரிசாக 10 ஆயிரம் ரூபாயும், 5ம் பரிசாக 8 ஆயிரம் ரூபாயும் இவற்றுடன் பதக்கம் மற்றும் கேடயங்களை முன்னாள் அமைச்சர் பழனியப்பன் வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுகவின் மாவட்ட துணைச் செயலாளர் வக்கில் மணி, பொருளாளர் முருகன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாசலம், சூளகிரி டி.எஸ்பி மனோகரன், மாநில விவசாய அணி துணைசெயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, மூத்த வழக்கறிஞர்சந்திரசேகர், மாரண்டஅள்ளி பேரூராட்சி தலைவர் வெங்கடேசன், மாவட்ட விவசாய அணி துனை அமைப்பாளர் ரவி, மருத்துவர் ஆனந்த். மோகன், பெரியசாமி, ஜெயந்திமோகன், சக்திவேல், மாவட்ட விளையாட்டு அணி அமைப்பாளர் ஆனந்தன், குமார், பேரூராட்சித் துணைத் தலைவர் இதயத்துல்லா, பேரூர் அவைத்தலைவர் அமானுல்லா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்,