உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு ஜெயம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை மாணவர்களின் சார்பில் பென்னாகரம் அருகே பூதிநத்தம் என்னும் ஊரில் நடைபெறும் தொல்லியல் அகழாய்வை பார்வையிட்டனர். பின்னர் தொல்லியல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வையும், தொல்லியல் அகழாய்வு செய்யும் முறை பற்றியும், பாரம்பரியத்தின் முக்கியத்துவத்தை பற்றியும், மாணவர்களுக்கு தொல்லியல் அகழாய்வு திட்ட இயக்குனர் முனைவர். எஸ்.பரந்தாமன் (அரசு தொல்லியல் அலுவலர்) உரை நிகழ்த்தினார்.

நிகழ்விற்கு மருதம் நெல்லி கல்விக் குழுமத்தின் தாளாளர் டாக்டர் கா.கோவிந்த், முதல்வர் சி.பரஞ்சோதி, வரலாற்றுத் துறை த்தலைவர் மா.சந்திரன் பேராசிரியர் கோ.திருவாசகம், மா.வெங்கடேசன், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.