பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வன்னியர்களுக்கு 10.5% உள்ள ஒதுக்கிட வழங்கிட கோரி தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் நீதியரசர் வீ. பாரதிதாசன் அவர்களுக்கும் வன்னியர்களுக்கு 10.5% உள்ள ஒதுக்கிட வழங்கிட கோரி தபால் அனுப்ப தனது கட்சியினருக்குக்கும், வன்னியர்களும் கோரிக்கை விடுத்தார், அதனை தொடர்ந்து தருமபுரி தலைமை தபால் நிலையத்தில் தருமபுரி பாமகவினர் தபால்களை பாட்டாளி இளைஞர் சங்கத்தின் முன்னாள் மாவட்ட செயலாளர் முனைவர் தகடூர் தமிழன் தலைமையில் அனுப்பினர்.

இந்நிகழ்வில் பாமகவின் பென்னாகரம் தொகுதி அமைப்பாளர் சுதாகிருஷ்ணன், அன்புமணி தம்பிகள் படை மாவட்ட செயலாளர் கார்த்திக்கேயன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாற்று சமுதாயத்தினை சார்ந்தவர்கள் உடன் இருந்தனர்.