தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஒன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளில் ஏழை எளிய மக்கள் தங்கள் வீட்டில் நடைபெறும் திருமணம், வளைகாப்பு, காதுகுத்து, மஞ்சள் நீராட்டு விழா உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் நடத்த அரசு திருமண மண்டபம் கட்டி தர வேண்டுமென கோரிக்கை மனுக்கள் அளித்தனர், அதன் அடிப்படையில் ஜக்கசமுத்திரம் ஊராட்சி ஜக்கசமுத்திரம் கிராமத்தில் சமையலறையுடன் கூடிய அரசு சமுதாய திருமண மண்டபம் 80லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் ஊராட்சி வளர்ச்சி மற்றும் முகமை திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் நேற்று பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் விதமாக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கேபி அன்பழகன் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார் .
இந்த நிகழ்ச்சியில் ஜக்க சமுத்திரம் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் ஊராட்சி செயலாளர் சரவணன் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
