இவருக்கு அவ்வப்போது வலிப்பு வரும், கடந்த மாதம் வலிப்பு நோய்க்கான மேல் சிகிச்சை பெற தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இவரை குறித்த எவ்வித விவரம் தெரியவில்லை. கடந்த வியாழக்கிழமை இரவு தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது குறித்து காந்திகுப்பம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது, அதனடிப்படையில் கிருஷ்ணகிரியை சேர்ந்த சமூக ஆர்வலர் அறம் சிகரம் கோபி என்பவரின் உதவியால் கந்திகுப்பம் காவல் உதவி ஆய்வாளர் மை தருமபுரி தன்னார்வலர்களை தொடர்பு கொண்டு உயிரிழந்த சாபுதின் உடலை நல்லடக்கம் செய்ய கேட்டுக் கொண்டனர்.
இதனை தொடர்ந்து மை தருமபுரி தன்னார்வலர்களுடன், காவலர் கார்த்திக் ஜெயக்குமார், மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் அருணாசலம், அருண் பிரசாத் ஆகியோர் தருமபுரி நகராட்சிக்கு உட்பட்ட பச்சையம்மன் மயானத்தில் சாபுதின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி நல்லடக்கம் செய்தனர். இதுபோல மை தருமபுரி தன்னார்வலர்களின் அமரர் சேவை மூலம் 47 உடல்களை நல்லடக்கம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, இவர்களின் செயலை சமூக ஆர்வலர்களும், பொது மக்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.