சட்ட மேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு பென்னாகரம் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. இந்நிகழ்வில் பாட்டாளி சமூக நீதிப் பேரவை மாநிலச் செயலாளர் மகாலிங்கம், மாவட்ட தலைவர் செல்வகுமார். முன்னாள் நகர தலைவர் ஆறுமுகம், நகரத் தலைவர் சந்தோஷ் மற்றும் சிலம்பரசன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மற்றும் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 133 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் கடத்தூரில் ஓசஅள்ளி ஊராட்சி மன்ற தலைவர் ஆறுமுகம் தலைமையில் அம்பேத்கர் திரு உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்குதல் மற்றும் கேக் , இனிப்புகள் வழங்கி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் அந்த பகுதியினை சார்ந்த முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.