தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் கே. ஈச்சம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஈ.அக்ரஹாரம் கிராமத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 132 வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய மாணவ மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி, பேச்சுப்போட்டி, ஓவிய போட்டி, நடன போட்டி, போன்ற போட்டிகள் நடைபெற்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது இந்த நிகழ்ச்சியில் கம்பைநல்லூர் காவல்துறை உதவியாளர்கள், தீ.மதியழகன் (தீயணைப்பு துறை ஓய்வு), தீ.திருப்பதி (இந்திய ராணுவம் ஓய்வு), கே.ஈச்சம்பாடி ஊராட்சி மன்ற தலைவர் சாந்தி வெள்ளையன், வார்டு உறுப்பினர்கள், மற்றும் சாமி நவலை (ஆதி திராவிட நலத்துறை) மொரப்பூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தலைவர்கள் தமிழ்செல்வி ரங்கநாதன் (தாசரஹள்ளி தலைவர்), அழகரசு (நவலை தலைவர்), தேவி சங்கர் (நவலை துணைத் தலைவர்), மு. சுரேஷ் (சமூக ஆர்வலர் ஏபிஜே பசுமை தேசம் குழு ), முத்து (மின்சாரத்துறை உதவியாளர் ஈ.அக்ரஹாரம்), டாக்டர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் ரா.அண்ணாசாமி ரா.திருவருட்செல்வம் சமூக ஆர்வலர் நா. சின்னமணி மற்றும் ஊர் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் 100 மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டனர்