வன்னியர்களுக்கு 10.5% உள் ஒதுக்கீடு வழங்கிட கோரி தமிழக முதல்வருக்கும் பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவருக்கும் தர்மபுரி தலைமை தபால் நிலையத்தில் முன்னாள் மாவட்ட இளைஞரணி செயலாளர் முனைவர் ஜெ.தகடூர்தமிழன் தலைமையில் செட்டியார் நாவிதர் உள்ளிட்ட பல்வேறு சமுதாயத்தினர் மனுக்களை தபாலில் அனுப்பினார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊடகப் பேரவை செயலாளர் சக்தி சிறுபான்மையினர் பிரிவை சேர்ந்த மாவட்ட தலைவர் சையத் கலீம், மாவட்டத் துணைத் தலைவர் பிலால், நகரச் செயலாளர் ஷாஜகான், சாணவாஸ் , செந்தில்குமார் செட்டியார், நாவிதர் குபேந்திரன் உள்ளிட்ட ஊடகப் பேரவை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.