தேர்தல் ஆணையம் அதிமுக பொது செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது இதனை கொண்டாடும் விதமாக அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுத்தது செல்லும் என இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்த நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதையடுத்து தர்மபுரி மாவட்டம் அரூர் பழையப்பேட்டையில் நகர ஐடி விங் துணை செயலாளர் நாகராஜ் தலைமையில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார், இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் சந்தோஸ் ஜம்பு ஐயப்பன் ரவி வேலாயுதம் முருகன் குமார் பெரியண்ணன் கண்ணன் சண்முகம் பெரியசாமி ஆறுமுகம் கோபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.