தேர்தல் சீர்திருத்தம் : 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் 100 % வாக்களிப்பது தேசிய கடமையாகும். புகைப்பட வாக்காளர் அடையாள அட்டை பிழையில்லாமல், வாக்காளர்களுக்கு 100 % வழங்கப் பட்டிருக்க வேண்டும் தேர்தல் விதிமுறைகள் அரசியல் கட்சிகளும், வேட்பாளர்களும், வாக்காளர்களும் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். மீறினால் தகுதிநீக்கம் செய்யப்பட வேண்டும்.

வாக்குரிமையின் விலைமதிப்பில்லா உன்னதத் தன்மையை, உணர்ந்து வாக்களித்தல். வாக்காளர்களுக்கு கட்சியோ, வேட்ப்பாளரோ பணம், பரிசு பொருட்கள் உள்ளிட்ட எதுவும் வழங்கக் கூடாது. வாக்காளர்கள் பணம், பரிசு பொருட்கள் பெறமாட்டோம் எனஉறுதி ஏறக வேண்டும்.
வேட்பாளரிடம் முன்வைப்புத் தொகை பெற்றுக் கொண்டு வேட்பாளர்களுக்கு கார், கொடி, துண்டுபிரசுரம், சுவரொட்டி போன்ற பிரச்சார தேவைகளை தேர்தல் ஆணைய இலச்சினையுடன் (LOGO) அனைவருக்கும் ஒரே எண்ணிக்கையில் அவர்கள் விரும்புகிறவடிவில் தேர்தல் ஆணையமே கொடுக்க வேண்டும். இல்லையேல் இதெல்லாம் பயன்படுத்த தேவையில்லை.
தேர்தல் ஆணையமே தொகுதியில்பொது மேடை அமைத்து கொடுத்து,ஒவ்வொரு வேட்பாளருக்கும் தேர்தல் பிரச்சார தேதி, நேரம் ஒதுக்கி வேட்பாளர் பிரச்சாரம் செய்ய வழிவகை செய்ய வேண்டும், முதியயோர் மற்றும் மாற்றுதிறனாளிகள் வாக்களிக்க கட்சியோ, வேட்பாளர்களோ வாகனவசதி செய்வதை தடுத்து. தேர்தல் ஆணையமே ஏற்பாடு செய்ய வகை செய்ய வேண்டும் ஒட்டுமொத்தமாக உண்மையான ஜனநாயகத்தை உருவாக்க சுதந்திரமாக, வெளிப்படையாக, நேர்மையாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.