தருமபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் சிகரலஅள்ளி பகுதியில் உள்ள நியாய விலை கடையில் மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை பென்னாகரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் G.K.மணி அவர்கள் கேட்டறிந்தார். பின்னர் அந்த நியாய விலை கடையில் பொருட்களின் தரம் பற்றிய ஆய்வு நடத்தினார். இந்நிகழ்வில் பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் செல்வகுமார், மந்திரி படையாட்சி ஒன்றிய செயலாளர் ராசா உலகநாதன் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
