தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் பேரூராட்சி கிருஷ்ணாபுரத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்பில் கற்போம் எழுதுவோம் திட்டம் மூலம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் தர்மபுரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களின் அறிவுறுத்தலின்படி பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம்,புதிய பாரத எழுத்தறிவு திட்டம் சார்பில் கற்போம் எழுதுவோம் திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு பேரணி பென்னாகரம் பேரூராட்சி கிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலிருந்து துவங்கி விநாயகர் கோவில் தெரு வழியாக கிருஷ்ணாபுரம் கடைவீதி வரை நடைபெற்றது.
இதில் வட்டார வள மேற்பார்வையாளர் சரவணன்,புதிய பாரத எழுத்தறிவு திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகேயன், பள்ளி தலைமை ஆசிரியை வாசுகி, பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், மாணவ மாணவியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
