இளைஞர்களின் உயர்வு நாட்டின் முன்னேற்றம் ஒவ்வொரு குடும்பத்தின் மேம்பாடு ஒட்டு மொத்த வளர்ச்சி நம் நாடு சுதந்திரம் பெற்று 74 வது குடியரசு தினம் கொண்டாடும் இந்நாளில் அனைவருக்கும் இனிய வாழ்த்துக்கள். மனிதநேயம் கொண்ட மனதோடு - வன்முறை, தீவரவாதம் போக்கி அன்பும், சகோதர நல்லிணக்கமும் ஓங்கி - மாண்புறு மனிதப் பண்புகள் காத்து ஒற்றுமையுடன் வாழ்வோம்.
அன்பு, அறிவு, எளிமை, உண்மை, நேர்மை, உழைப்பு, தன்னம்பிக்கை, அர்ப்பணிப்பு , சேவை எனும் நற்குணங்கள் போற்றுவோம்.வேளாண் வளர்ச்சி, நீர்ப்பாசனத் திட்டங்கள், இளைஞர் வேலையில்லாத் திண்டாட்டம் போக்குதல், தொழில் வளர்ச்சி, விலைவாசி குறைப்பு, பெண்கள் பாதுகாப்பு, தரமான கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட ஒட்டுமொத்த வளர்ச்சியும், விவசாயிகள், நெசவாளர்கள், மீனவர்கள், தொழிலாளர்கள், அரசு ஊழியர், ஆசிரியர்கள் போன்ற அனைத்து தரப்பு மக்களுகள் முன்னேற்றம் காண பாடுபடுவோம், உறுதியேற்போம்.

ஒவ்வொரு தனி மனிதனின் வளர்ச்சியும், அதன் மூலம் உருவாகும் ஒவ்வொரு குடும்பத்தின் மேம்பாடும் தான் நாட்டின் உயர்வு என்பதை மனதில் தாங்கி, இது என் நாடு, என் நாட்டு மக்கள். என் நாட்டுக்காகவும் என் நாட்டு மக்களுக்காகவும் என்னால் இயன்ற அளவு சேவை நோக்குடன் அர்ப்பணிப்புடன் செயல்படுவேன் என இந்நாளில் உறுதி ஏற்போம்.
நமது நாடு வலிமையான ஜனநாயக நாடு. மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிகள் மூலம் மக்களாட்சியை உருவாக்கும் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவது தேர்தல். இந்த உன்னதமான தேர்தல் விலை மதிக்க முடியாத வாக்குரிமையை பணம் கொடுத்து பெறுவது போலி ஜனநாயகத்தையே உருவாக்கும். நல்ல வளர்ச்சியை கொடுக்கும் மக்கள் எதிர்பார்க்கும், விரும்புகின்ற நல்லாட்சி அமையாது கேள்விக்குறியே மிஞ்சும். நல்ல ஜனநாயகத்தை உருவாக்குவோம். அனைவரும் எல்லா உரிமைகளும் நலன்களும் பெற்று மன நிறைவுடன் மகிழ்வுடன் வாழ இனிய குடியரசு தின வாழ்த்துக்கள்.