அதனை தொடர்ந்து இந்தியாவில் 1952 ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது என்றும், இந்தியாவில் முதல் தேர்தலை 1952 ஆம் ஆண்டு இந்திய தேர்தல் ஆணையம் பல சவால்களையும் தாண்டி முதல் தேர்தல் நடத்தி வெற்றி கண்டது என அரசு கலைக் கல்லூரி முதல்வர் முனைவர் கிள்ளிவளவன் மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் மூத்த வாக்காளர்களுக்கும் இளைய வாக்காளர்களுக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் சால்வை அணிவித்தும் புத்தகங்கள் கொடுத்தும் மரியாதை செய்தனர். பின்னர் மாவட்ட அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.

பின்னர் நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளில் சிலம்பாட்ட நிகழ்ச்சி மிக சிறப்பாக நடத்தி அனைவரின் பாராட்டுகளையும் பெற்றனர். நிகழ்ச்சியில் தருமபுரி கோட்டாட்சியர். கீதாராணி, நல்லம்பள்ளி வட்டாட்சியர் ஆறுமுகம், அரசு கல்லூரி முதல்வர் கிள்ளிவளவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர். வெ.லோகநாதன் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் மற்றும் மாணவ மாணவிகள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.