ஒடசல்பட்டியில் செயல்படும் லட்சுமி அம்மாள் கல்வி அறக்கட்டளை சார்பாக கொரோனா நோயால் கணவரை இழந்த கைம்பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது, இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கடத்தூர் பேரூராட்சி தலைவர் கேஸ் மணி. கிரீன் பார்க் பள்ளி தாளாளர் எவரெஸ்ட் முனிரத்தினம். அறக்கட்டளையின் தலைவர் சுரேஷ்குமார் திட்ட அலுவலர் சென்னை ஜெருசொலோ வினோத் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிவில் கைம்பெண்களுக்கு உதவி கரமாக இருக்கும் வகையில் பத்துக்கும் மேற்பட்டோருக்கு அறக்கட்டளை சார்பாக தையல் இயந்திரம் இலவசமாக வழங்கப்பட்டது.