மேலும் சிறிய அளவிலான கூட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக 50 இருக்கைகள் கொண்ட குளிர்சாதன வசதியுடன் கூடிய மினி அரங்கம் மற்றும் பார்க்கிங் வசதியுடன் இந்த ரோட்டரி அரங்கம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. நல்ல காற்றோட்டமான சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த தர்மபுரி ரோட்டரி அரங்கம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
விழாவுக்கு ரோட்டரி அறக்கட்டளை தலைவரும், ஸ்ரீ விஜய் வித்யாலயா கல்வி நிறுவனங்களின் தலைவருமான டி.என். சி. மணிவண்ணன் தலைமை தாங்கினார். ரோட்டரி சங்க தலைவர் சக்திவேல், மிட்டவுன் ரோட்டரி சேர்ந்த தலைவர் சரவணன், ரோட்டரி எலைட் சங்க தலைவர் ஜெயவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் ரோட்டரி உதவி ஆளுநர் கண்ணன் வரவேற்றார்.விழாவில் மாவட்ட கலெக்டர் சாந்தி கலந்துகொண்டு ரிப்பன் வெட்டி புதுப்பிக்கப்பட்ட ரோட்டரி அரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் கோவிந்தசாமி எம்.எல்.ஏ., தாசில்தார் ராஜராஜன், ரோட்டரி உதவி ஆளுநர் பாலாஜி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் குத்து விளக்கு ஏற்றினர்.

விழாவில் கலெக்டர் சாந்தி பேசுகையில், தர்மபுரி ரோட்டரி சங்கத்தினர் இலவச கண் சிகிச்சை முகாம், பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி உட்பட, பல்வேறு சேவைகள் மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். பின் தங்கிய மாவட்டமாக இருந்த தர்மபுரி முன்னேறி வரும் மாவட்டமாக மாறியுள்ளது. மாவட்ட வளர்ச்சிக்கு, ரோட்டரி சங்கமும் உறுதுணையாக இருக்க வேண்டும். இந்த தர்மபுரி ரோட்டில் அரங்கம் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் சிறப்பாக செயல்பட எனது நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறினார்.
விழாவில் ரோட்டரி முன்னாள் உதவி ஆளுநர்கள் கிருஷ்ணன், கோவிந்தராஜ், தர்மபுரி ரோட்டரி சங்க செயலாளர் தட்சிணாமூர்த்தி, ரோட்டரி மிட்டவுன் சங்க செயலாளர் இளவரசன், பொருளாளர் வீரராகவன், ரோட்டரி எலைட் சங்க செயலாளர் ஸ்ரீதர், பொருளாளர் அபிஷாலா, ரேணுகா தேவி உள்ளிட்ட பெண் உறுப்பினர்கள், முன்னாள் தலைவர்கள், சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தர்மபுரி ரோட்டரி சங்க பொருளாளர் கருணாகரன் நன்றி கூறினார். விழா நிகழ்ச்சிகளை ஆசிரியர் சவுந்தர பாண்டியன் தொகுத்து வழங்கினார்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.