பொம்மிடி போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர், தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அருகே உள்ள பி, துருஞ்சிப்பட்டி பழைய சினிமா தியேட்டர் அருகில் கல்பனா ஏஜென்சி என்ற வீட்டு உபயோக பொருட்கள் கடை நடத்தி வருபவர் களிறு கண்ணன் இவர் தர்மபுரி மாவட்ட பாஜகவில் எஸ் சி பட்டியல் அணி தலைவராக உள்ளார், இவர் நேற்று இரவு 9 மணி அளவில் இரண்டு கடைகளில் சட்டர்களை பூட்டிவிட்டு வீட்டுக்குச் சென்றுள்ளார், அதேபோல அருகில் கார்த்திக் ஹோட்டல் இயங்கி வருகிறது, அதன் உரிமையாளர் கார்த்திக்கும் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளார், மேலும்இதை அடுத்து தியேட்டர் அருகில் உள்ள பேக்கரி நடத்தி வருபவர் கடையை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றுள்ளார்.
இன்று அதிகாலை கடையின் உரிமையாளர்கள் கடைக்கு வந்து பார்த்தபோது கடையின் சட்டர்கள் தூக்கப்பட்டு கதவு நெம்பிய நிலையில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி உற்றனர், உடனடியாக பொம்மிடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர், தகவல் அறிந்து வந்த பொம்மிடி காவல் உதவி ஆய்வாளர் சக்திவேல் தலைமையிலான போலீசார் திருட முயற்சிக்கப்பட்ட மூன்று கடைகளையும் ஆய்வு செய்து உள்ளே ஏதாகிலும் பொருட்கள் காணாமல் போய் உள்ளதா? பணம் திருடு போய் உள்ளதா? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது ஹோட்டலின் உரிமையாளர் கார்த்திக் மட்டும் தனது கல்லாவில் 15 ஆயிரம் ரூபாய் பணம் இருந்ததாகவும், அவை திருடு போய் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார், இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களையும், செல்போன் பயன்பாடுகளையும் போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர், திருடர்களின் கைரேகை கண்டுபிடிப்பதற்காக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொம்மிடி பகுதியில் மீண்டும் திருடர்கள் திருட முயற்சித்துள்ள சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
