தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் பொம்மிடி பகுதியில் உள்ள பொ. மல்லாபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் (25.01.2023)இன்று தேசிய வாக்காளர் தினம் கடைபிடிக்கப்பட்டது.
இத்தினத்தில் வாக்காளர் தின உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது பள்ளியின் தலைமை ஆசிரியர் பழனிசாமி ஆசிரியர்கள் சங்கர் செந்தில் தனசேகரன் குப்புசாமி மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்கள் மாணவர்கள், ஆகியோர் கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

மேலும் இந்த வாக்காளர் தினத்தின் அவசியத்தையும் வாக்களிப்பதின் அவசியத்தையும் மாணவர்களுக்கு விரிவாக எடுத்துரைக்கப்பட்டது இந்நிகழ்வை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் தமிழ் தென்றல் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.