பென்னாகரத்தை அடுத்துள்ள சின்ன பள்ளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர்களின் உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியரும் வாக்குச்சாவடி நிலையை அலுவலருமான மா. பழனி வாக்காளர்களின் உறுதிமொழி வாசிக்க பொதுமக்கள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர் மணி, வாக்குச்சாவடி அலுவலர் அம்பிகா, ஆசிரியர்கள் வளர்மதி, பழனிச்செல்வி, கல்பனா திலகவதி, ராஜேஸ்வரி மற்றும் ஊர் பெரியவர்கள் முனுசாமி, இடும்பன், சின்னசாமி, கரூரான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
