இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 13-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தருமபுரி அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளை மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி.சு.அனிதா அவர்கள் பார்வையிட்டார்கள்.
உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதி.பழனிதேவி, தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் திருமதி டி.ஆர்.கீதாராணி, தருமபுரி அரசு கலைக்கல்லூரி முதல்வர் முனைவர் பி.கே.கிள்ளிவளவன், நல்லம்பள்ளி வருவாய் வட்டாட்சியர் திரு.ஆறுமுகம், தருமபுரி வருவாய் வட்டாட்சியர் திரு.ராஜராஜன், தேர்தல் தனி வட்டாட்சியர் திரு.எச்.சௌகத்அலி உள்ளிட்ட பலர் இருந்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.
