Type Here to Get Search Results !

கூத்தப்பாடி கிராமத்தில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து கொண்டாடிய மாட்டு பொங்கல் விழா.


கூத்தப்பாடி கிராமத்தில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து படையல் இட்டு கொண்டாடினர் பின்னர் மாடு ஓட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி கிராமத்தில் மாட்டுப்பொங்கலை முன்னிட்டு கிராம மக்கள் ஒன்று சேர்ந்து பொங்கல் வைத்து படையல் இட்டு கொண்டாடினர் பின்னர் மாடு ஓட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


பென்னாகரம் அருகே உள்ள கூத்தப்பாடி கிராமத்தில் ஊர் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு குழு கமிட்டி நடத்தும் பொங்கல் திருவிழா  நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு நாட்களாக வெகு விமர்சையாக  நடைபெற்று வருகிறது. இன்று மாட்டுப் பொங்கல் தினம் என்பதால் கூத்தப்பாடி கிராமத்தில் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் அனைத்து மாடுகளுக்கும் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி, அலங்கரித்து கோவில் முன்பு திரண்டனர்.


பின்னர் பொங்கல் வைத்து படையல் இட்டு மகிழ்ச்சி பொங்க மாட்டுப் பொங்கலை கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் கூத்தப்பாடி கிராம ஊர் கவுண்டர்கள் சின்னராஜி, கண்ணையன், மந்திரி கவுண்டர்கள் மாதையன் தலைமை ஆசிரியர் ஓய்வு எல்லப்பன் கோம்பு கவுண்டர்கள் அசோகன் K.V.முருகேசன் பட்டதாரி ஆசிரியர் ஏழு ஊர் கட்டாமணி கவுண்டர் M.வைகுந்தம் கோல்காரர் எல்லம்மாள் வேலு மற்றும் விளையாட்டு குழு கமிட்டி மற்றும் கிராம இளைஞர்கள், ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies