Type Here to Get Search Results !

நாகனூரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சேர்ந்து கொண்டாடிய பொங்கல் விழா.

தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நாகனூரில்  500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு ஊர் பொதுமக்கள் மற்றும் விளையாட்டு குழுவினர் இணைந்து பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை  கொண்டாடினர்.

தை பொங்கல் முதல் நாளில் ஸ்ரீ வீரபத்திர சுவாமியின் வீதி உலா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து  நேற்று  பாரம்பரிய விளையாட்டுப் போட்டியான  வழுக்கை மரம் ஏறுதல், கயிறு இழுத்தல் நடைபெற்றது தொடர்ந்து குழந்தைகளுக்கான ஓட்டப்பந்தயம்   பானை உடைத்தல், உள்ளிட்ட போட்டிகள்  நடைபெற்றது. இதனை தொடர்ந்து இரவு கலை நிகழ்ச்சியாக சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களின் நடன திறமைகளை மேடையில் அரங்கேற்றம் செய்தனர். 


இதற்கான ஏற்பாடுகளை ஊர், மந்திரி கவுண்டர்  மற்றும் ஊர் நாயுடு ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இறுதியில் போட்டியில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வினை சுமார் ஐநூறு பொதுமக்கள் கண்டு களித்தனர். தர்மபுரி மாவட்டம்  பென்னாகரம் வட்டம் நாகனூரில் பொங்கல் கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது. 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies