தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் புதிய பேருந்து நிலையம் முன்பு அதிமுக சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் 106 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்ச்சிக்கு அதிமுக விவசாயி பிரிவு தலைவர் டி ஆர் அன்பழகன் தலைமை தாங்கினார். பென்னாகரம் நகர கழக செயலாளர் பி.எம் சுப்பிரமணியம், பென்னாகரம் ஒன்றிய கழக செயலாளர்கள் வேலுமணி, கே சி அன்பு, மாவட்ட கவுன்சிலர் குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பென்னாகரம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் எம்ஜிஆர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர செயலாளர் பாரிவள்ளல் சுந்தரம், அண்ணா நரசிம்மன், பேரூராட்சி கவுன்சிலர்கள் ராதிகாபாய் மாதவ் சிங், பீமன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
.gif)

