Type Here to Get Search Results !

பென்னாகரம் பகுதியில் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாக்கள்.

பென்னாகரத்தை அடுத்துள்ள சின்னப்பளத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்  பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முதலில் பொங்கல் வைத்து படையல் இட்டு வழிபாடு செய்தனர். பின்னர் அனைத்து மாணவர்களுக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.


இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் மா. பழனி, ஆசிரியர் வளர்மதி பழனிச்செல்வி, கல்பனா, திலகவதி, சத்துணவு அமைப்பாளர் அம்பிகா, உள்ளிட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.



பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமத்துவ பொங்கல் விழா ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கவிதா இராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதலில் சூரிய பொங்கல் இட்டு வழிபாடு செய்தனர்.


பின்னர் அனைத்து நபர்களும் பொங்கல் வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டது இந்நிகழ்வில் பென்னாகரம் BDO, மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் அன்பு மற்றும் அலுவலக பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies