Type Here to Get Search Results !

சிறுதானிய பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சிறு தானிய பொங்கல் விழா.


தர்மபுரி டிஆர்சிஎஸ் தொண்டு நிறுவனம் சார்பில், சர்வதேச சிறுதானிய ஆண்டையொட்டி பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 2023 ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது. தற்போது பொதுமக்களிடையே அரிசி உணவு அதிகரித்து சிறுதானியங்கள் பயன்பாடும், சாகுபடி பரப்பும் குறைந்துள்ளது இந்நிலையில் சிறுதானிய சாகுபடி பரப்பு அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 


சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவித்ததன் எதிரொலியாக தர்மபுரியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தர்மபுரி ரிசோசர்ஸ் சொசைட்டி சுய உதவிக் குழு, மகளிர் சுய உதவி குழுக்களுடன் சேர்ந்து சிறுதானிய பொங்கல் விழா நடத்தியது.


டிஆர்சிஎஸ் தொண்டு நிறுவனம் மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் பொங்கல் திருவிழாவை நடத்தியது. திணை, பாசிப்பயிறு, நாட்டு சக்கரை பயன்படுத்தி சிறுதானிய பொங்கல் வைக்கப்பட்டது. மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்த விழாவில் தொனி கூட்டமைப்பு தலைவர் ஆனந்தன், ரோட்டரி சங்க தலைவர் சக்திவேல், தர்மபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி, முதுநிலை மேலாளர் ரமேஷ், பேங்க் ஆப் பரோடா முதுநிலை மேலாளர் தர்மலிங்கம், சமூக செயல்பாட்டாளர் ராஜகோபால், டிஆர்சிஎஸ் இயக்குனர் ரவிச்சந்திரன், ரியல் ஃபவுண்டேஷன் இயக்குனர் செந்தில்ராஜா மற்றும் டிஆர்சிஎஸ் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.


- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ். 

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* தயவுசெய்து இங்கே தொடர் திணிப்பை (Spam) செய்யாதீர்கள். அனைத்து கருத்துகளும் நிர்வாகியால் மதிப்பாய்வு செய்யப்படுகின்றன.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies