தர்மபுரி பைசுஹள்ளியில் செயல்பட்டு வரும் பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மையம் நாட்டு நலப்பணித் திட்டத்தின் சார்பாக 'தேசிய இளைஞர் தினம்' கொண்டாடப்பட்டது.
இதில் விவேகானந்தர் பற்றிய ஒரு அறிமுக உரையை பெரியார் பல்கலைக்கழக பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குனர் (பொ) முனைவர் மோகனசுந்தரம் வழங்கினார். முன்னதாக இவ்வாராய்ச்சி மைய நாட்டு நலப்பணித் திட்ட அலுவலரும் ஆங்கிலத் துறை தலைவருமான முனைவர் கோவிந்தராஜ் அவர்கள் வரவேற்புரை வழங்கி இந்நிகழ்வுக்கான நோக்கம் பற்றியும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணாக்கர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இறுதியாக நாட்டு நலப்பணித் திட்ட மாணவி செல்வி யுவஸ்ரீ நன்றியுரை ஆற்றினார். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித் திட்ட மாணாக்கர்கள் செய்திருந்தனர்.

.gif)

