இந்த மறியலுக்கு ஏஐடியுசி மாநில செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். சிபிஐ மாவட்ட செயலாளர் கலைச்செல்வம் மறியலை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார்.
தொழிலாளர் விரோத கொள்கையையும் 4 சட்ட தொகுப்புகளையும் கைவிட வேண்டும், 240 நாட்கள் பணி புரிந்தால் பணி நிரந்தரம் செய்து ரூபாய் 21 ஆயிரத்துக்கு குறையாக ஊதியம் வழங்கிட வேண்டும், ரூபாய் 6000 திற்கு குறையாத ஓய்வு ஊதியம் வழங்கிட வேண்டும், நலவாரிய பதிவுகளை எளிமைப்படுத்தி நில பலன்களை உயர்த்த வேண்டும், மின் உரிமம் பெற்ற மின் ஒப்பந்தக்காரர் கையொப்பம் இல்லாமல் மின் இணைப்பு வழங்கக் கூடாது, மின்கம்பி உதவியாளர், மின் கம்பியாளர் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு மின்சார வாரியத்தில் வேலை வழங்க வேண்டும், அரசு போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் முழுமையாக வழங்க வேண்டும், பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ஓய்வு பெறும் நாளன்றே அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கு பணப்பலன் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மறியல் போர் நடந்தது. தர்மபுரி நகர காவல் ஆய்வாளர் நவாஸ் தலைமையில், உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் கலந்துகொண்ட 210 பேர் கைது செய்யப்பட்டு தனியார் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். பின்பு அனைவரையும் மாலை விடுவித்தனர்.
- மாவட்ட செய்தியாளர் மோகன்தாஸ்.