தருமபுரி மாவட்ட நேரு யுவ கேந்திராவின் சார்பில் தேசிய இளைஞர் வார விழாவின் நிறைவு விழாவினை முன்னிட்டு மொரப்பூர் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம் மோட்டூர் சோலைப்பூங்கா மற்றும் கலைஞர் நகர் மொரப்பூர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றத்தை சார்ந்த 20 இளைஞர்கள் தன்னார்வ அடிப்படையில் இரத்ததானம் செய்தனர். இரத்ததானத்தினை மருத்துவர் மதன்ராஜ் தொடங்கி வைத்தார். தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி இரத்தவங்கி கவுன்சிலர் தேவி முன்னிலை வகித்தார்.
இரத்ததானம் வழங்கும் நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மோட்டூர் சோலைப்பூங்கா அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் பாரதி, மொரப்பூர் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் பூமணி ஆகியோர் செய்திருந்தது குறிப்பிடதக்கது ஆகும். தன்னார்வ இரத்ததானம் வழங்கிய இளைஞர்களை நேரு யுவ கேந்திராவின் திட்ட மேற்பார்வையாளர் வேல்முருகன், மொரப்பூர் விப்ரோ தொண்டு நிறுவன இயக்குநர் வெங்கடேசன் ஆகியோர் பாராட்டினர்.

இரத்ததானம் வழங்கிய இரத்த கொடையாளர்களுக்கு நேரு யுவ கேந்திராவின் சார்பில் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டது. நிறைவாக நேரு யுவ கேந்திராவின் மொரப்பூர் ஊராட்சி ஒன்றிய தேசிய இளைஞர் தொண்டர் ஞானராஜ் நன்றி கூறினார்.